10 ஆண்டு கால போராட்டம் வெற்றி: பொதுமக்கள் பாராட்டு!
3 Oct 2026, 1:42 am

10 ஆண்டு கால போராட்டம் வெற்றி: பொதுமக்கள் பாராட்டு!

நாமக்கல், அக்.2– ஏரி பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு, மாற்று இடம் கேட்டு நடைபெற்ற 10 ஆண்டு கால போராட்டம் தற்போதுமுடிவிற்கு வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பிலி குளத்துளவு பகுதியில் உள்ள பெரிய ஏரிஆழப்படுத்தப்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக மாறிய பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்நோய்வாய்ப்பட்டு வாழ்ந்து வந்தனர்.அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் புறக்கணிப்பு, முற்றுகை, உண்ணாவிரதம், ஆற்றில் இறங்கும் போராட்டம் மற்றும் அரை நிர்வாணப் போராட்டம் என பல்வேறு தீவிரபோராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன் பலனாக, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் மற்றும் வட்டாட்சியர் ராஜா அளித்தஉத்தரவாதத்தின் பேரில் போராட்டங்கள் கைவிடப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் மூலம் 27 குடும்பங்களுக்கு மாரப்பம்பாளையம் கிழக்குப் பகுதியில் அளவீடு செய்யப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின், அவரது நேர்முக உதவியாளர் தங்கம், வட்டாட்சியர் ராஜா, எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் ஆகியோரை வெள்ளியன்று நேரில் சந்தித்த பொதுமக்கள், சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் சு.சுரேஷ், அசோகன்,ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ்,கிளைச் செயலாளர்கள் பி.தங்கவேல், எம்.லட்சுமி, மூத்த தோழர்சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்ஈஸ்வரன் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் திரளாககலந்து கொண்டனர்.