தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்க பஞ்சாலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்

1 hour before
குறைந்தபட்ச ஊதியம் வழங்க பஞ்சாலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்

குறைந்தபட்ச ஊதியம் வழங்க பஞ்சாலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்

நாமக்கல், நவ.2-பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.544 வழங்கக்கோரி, பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் வெப்படை பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு வழங்குகின்ற விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை 9 நாட்கள் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். விடுதியில் தங்கி ஆலைகளில் பணிபுரியும் இளம்பெண்கள், வட மாநில தொழிலாளர்கள் அனைவருக்கும், வேலை பழகுநருக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை ஆலை நிர்வாகங்கள் வழங்குவதில்லை. எனவே அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.544 வழங்க வேண்டும். பஞ்சாலை சங்கம் வைத்துள்ள 30 சதம் போனஸ் கோரிக்கையை அமல்படுத்த வேண்டும்.

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு தற்போது வரை இஎஸ்ஐ, பிஎப் போன்ற அரசின் சட்டசலுகைகள் கிடைக்காதநிலை உள்ளது. இதுகுறித்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி சிஐடியு நாமக்கல் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட தையல் கலைஞர்கள் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து ஞாயிறன்று வெப்படை பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாலை சங்க மாவட்டத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.தனபால், தையல் சங்க மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரி, மாவட்டப் பொருளாளர் ராயப்பன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில், பென்சனர்கள் சங்க மண்டலத் தலைவர் எ.மாணிக்கம், ஊரக உள்ளாட்சி தொழிலாளர் சங்க நிர்வாகி பி.முத்துசாமி, ஆட்டோ சங்க நிர்வாகி சண்முகம், கட்டுமான சங்க மாவட்டப் பொருளாளர் வி.எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.