காலை உணவு உண்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு
27 Sept 2026, 2:05 am

காலை உணவு உண்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு

நாமக்கல், செப்.26-மல்லசமுத்திரத்தில் காலை உணவு உண்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அரசு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 680 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 200 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் துவக்கிய பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் கடந்த மூன்று நாட்களாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று காலை 110 மாணவர்களுக்கு சேமியா கிச்சடி உணவு வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் வினித், சதிஸ், சந்தோஷ், ரோகித், யுவன், உள்ளிட்ட 14 பேருக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளனர். மேலும், சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கம் உடனடியாக மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பிரசாத் அறிவுறுத்தலின்படி தலைமை மருத்துவர் தமிழி

னியன் தலைமையில் மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு ரத்த மாதிரிகள் எடுத்தும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட மாணவர்களின் மலம் மாதிரிகளும் எடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவ

மனைக்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உடனடியாக உணவு, ரத்தம் மற்றும் மல மாதிரிகளை சேலத்திற்கு ஆய்வுக்கு விரைவாக எடுத்துச் சென்று பரிசோதனைக்கு கொடுத்

தார். மேலும் குளுக்கோஸ் ஏற்பட்டு மருந்துகள் கொடுக்கப்பட்ட மாணவர்கள் நல்ல நிலைமைக்கு வந்தவுடன் பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இதுசம்பந்தமாக, பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம் கேட்டபோது, வழக்கம்போல் 110 மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சாப்பிடனர். இதில், 3 மாணவர்கள் வாந்தி எடுத்தனர். மேலும், 11 மாணவர்களுக்கு லேசான வயிற்றுவலி ஏற்பட்டது. ஒவ்வாமை, காய்ச்சல் குறைபாட்டால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர், என்றார்.