தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சத்துணவில் எடை குறைந்த முட்டைகள் விநியோகம்

1 Jul 2026, 1:33 am
சத்துணவில் எடை குறைந்த முட்டைகள் விநியோகம்

சத்துணவில் எடை குறைந்த முட்டைகள் விநியோகம்

நாமக்கல், ஜூன் 30- அரசு பள்ளியில் மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துண வில் எடை குறைந்த முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ள தாக பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.

இப்பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் குழந்தைகள் தமிழ் நாடு - அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சத்துணவு சாப் பிடும் குழந்தைகளுக்கு ஊட்டச் சத் தாக தினந்தோறும் ஒரு முட்டைகள் வழங்கப்படுகிறது.

இந்த முட்டை கள் 45 கிராம் எடைக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என அரசு ஒப்பந் தம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலை யில் பள்ளிபாளையம் சங்கிகிரி சாலையில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கண்டிப் புதூர் அரசு பள்ளியில் முட்டைகள் சிறியதாக இருப்பதாக, பள்ளி குழந்தைகள் பலரும் பெற்றோர் களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, திங்களன்று பள்ளி மேலாண்மை குழுவினர் தராசு மூலம் முட்டையை எடை போட்டு பார்த்தனர்.

இதில், பல முட்டைகளின் எடை 35 கிராமிற்கும் குறைவாக இருந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் அனைத்து குழந்தைகளுக்கும் சரி யான விகிதத்தில் ஊட்டச்சத்து முட்டைகள் கிடைக்கப்பெறாத சூழல் உள்ளது.

இதுகுறித்து முறை யான கண்காணிப்பும் இல்லாத தால் இது போல் அடிக்கடி நடை பெறுவதாக பெற்றோர்கள் தரப் பில் புகார் தெரிவித்தனர். இ

தனையடுத்து தகவல் அறிந்த மாவட்ட சத்துணவு உணவு வழங் கல் துறை அதிகாரிகள் செவ்வா யன்று சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு வருகை தந்து முட்டை களை தரம் பிரித்து எடை போட்டு பார்த்த பொழுது, சில முட்டைகள் 65 கிராமிலும் பல முட்டைகள் 40, 36, 33 என குளறுபடியான எடை கிரா மிலும் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அதிகாரிகள் அரசின் விதிகளுக்கு மாறாக 45 கிராமுக்கு கீழாக உள்ள சத்துணவு குறை வான முட்டைகளை பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டாம்.

அதை தரம் பிரித்து தனியே வைத்து திருப்பி அனுப்புமாறும், இது குறித்து சத் துணவு முட்டை ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாகவும் தெரிவித்துள் ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.