நாமக்கல் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி!
16 Sept 2026, 9:09 pm

நாமக்கல் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி!

நாமக்கல், செப். 16 -நாமக்கல் அருகே, காரும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர்பலியாகினர்.நாமக்கல் மாவட்டம், நல்லி பாளையம் புறவழிச்சாலையில், புதனன்று அதிகாலை, பெங்களூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது காரில், கரூர் மாவட்டம்,பள்ளப் பட்டி என்ற பகுதிக்கு கரூர் நோக்கிச் சென்றனர்.  இதே சாலையில், திருச் செந்தூர் சென்று விட்டு பெங்களூரு நோக்கி திரும்பிச் சென்ற கார் ஒன்று, எதிர்புறத்தில்கரூர் நோக்கிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், கரூர் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த, காரை ஓட்டிவந்த கார்த்திக்குமார் (35), அவரது தந்தை செல்வராஜ் (60), தாய் காந்திமதி (55) ஆகிய3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

பெங்களூருவை நோக்கிச் சென்ற காரை ஓட்டி வந்த கிசான்

கவுடா (19) என்பவர் படுகாயமடைந்தார். இவருடன் பயனித்த மேலும் மூன்று பேரும் காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.