அடிப்படை வசதிகள்: மக்கள் கோரிக்கை
31 Oct 2026, 12:13 am
<p><strong>அடிப்படை வசதிகள்: மக்கள் கோரிக்கை</strong></p><p>நாமக்கல், அக்.30-புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காவேரி ஆர்எஸ் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி கோரிக்கை எழுந்துள்ளது-இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள புதுப்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட காவேரிஆர்.எஸ்.பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளது. இங்கு புதுப்பாளையம் செல்லும் சாலை ஓரத்தில், அதிகளவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை இப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலை ஓரத்தில் அதிக அளவு செடி கொடிகள் படர்ந்துள்ளதால், எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அதே போலஇரவு நேரங்களில் போதிய மின் வெளிச்சம் இல்லாத நிலையும் உள்ளது. எனவே பழுதடைந்த நிலையில்உள்ள மின்விளக்குகளை மாற்றியும், தேவைப்படும்இடத்தில் புதிதாக மின்விளக்குகளை அமைத்து தரவேண்டும். மலை போல் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செடி கொடிகளைஊராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p>
