முந்தய பக்கம்

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் மனு!

22 Jul 2026, 11:00 pm
அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் மனு!
<p><strong>அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் மனு!</strong></p><p>நாமக்கல், ஜூலை 22- அரசுப்பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியிடம் பொது மக்கள் செவ்வாயன்று கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற உறுப் பினரும், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சருமான விஜய லட்சுமி, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதி களில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் செவ்வா யன்று பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் அளித்த மனுவில், பள்ளிபாளை யம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 94 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் இல்லாததால் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யச் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். சுத்தமான குடிநீர், சிசிடிவி கேமராக்கள் மற்றும் போதுமான கழிப்பறை வசதிகளை உட னடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மனுவில் வலியு றுத்தப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram