தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூலி உயர்வு கோரிக்கை: போராட்டத்தில் ஈடுபட விசைத்தறி தொழிலாளர் சங்கம் முடிவு

47 minutes before
கூலி உயர்வு கோரிக்கை: போராட்டத்தில் ஈடுபட விசைத்தறி தொழிலாளர் சங்கம் முடிவு

கூலி உயர்வு கோரிக்கை: போராட்டத்தில் ஈடுபட விசைத்தறி தொழிலாளர் சங்கம் முடிவு

நாமக்கல், நவ. 15-விசைத்தறி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட விசைத்தறி தொழிலாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில், சிறப்பு பேரவைக் கூட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சங்க அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.இதில், சிஐடியு மாநில உதவிச் செயலாளர் ரங்கராஜ் ,சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வுக்கான 10சதவிகித ஒப்பந்தம், கடந்த ஆண்டு மே 2025மாதத்துடன்நிறைவடைந்து 18 மாதங்களை கடந்துவிட்டது. கடுமையான விலைவாசி உயர்வுக்குஏற்ப 75 சதம் கூலி உயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளைநிறைவேற்றி தருமாறு, பலமுறை அரசு நிர்வாகத்திற்கும் விசைத்தறி உரிமையாளர்கள் கடிதம் அனுப்பி பல்வேறு இயக்கங்களை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் வருகிற நவம்பர் 18ஆம் தேதிதிருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலகம் முன்பு பெருவாரியான தொழிலாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது. விசைத்தறி தொழிலாளர்களின் நியாமான கோரிக்கைகளை அதிகாரிகளிடம் மனுக்களாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், சங்க மாவட்டத் தலைவர் கே.மோகன், சங்க ஒன்றியச் செயலாளர் கே.குமார் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.