கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
15 Jul 2026, 10:47 pm
<p><strong>கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூலை 15- 75 சதவிகித கூலி உயர்வு வழங்கக்கோரி காவேரி ஆர்.எஸ். பகுதியில் நாமக்கல் மாவட்ட விசைத் தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி களில் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கி வரும் நிலையில், இந்த தொழிலை நம்பி மறைமுகமாகவும் நேரடியாக வும் ஏராளமான தொழிலாளர்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் விசைத்தறி தொழி லாளர்களுக்கு இரண்டு ஆண்டுக ளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப் பந்தமும், தீபாவளி போனஸ் ஒப்பந் தமும் சிஐடியு தொழிற்சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் போடப்படுவது வழக்கம். இந்நி லையில் கடுமையாக ஏறி வரும் விலைவாசி உயர்வு, விசைத்தறி தொழிலாளர் கூலி குறைப்பு, சிறு, குறு தொழில் பாதிப்பு என ஏராள மான பிரச்சனைகளை விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள் சந் தித்து வருகின்றனர். பள்ளிபாளை யம் பகுதியில் விசைத்தறி தொழி லில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக் கும், ஏற்கனவே போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியான நிலையில் 31.6.2025 சங்க மகா சபை கூடி 75 சதவிகித கூலி உயர்வு, இரவு நேர வேலை செய்பவர் களுக்கு டிபன், அலவன்ஸ், ஓவர் சிப்ட் ரத்து, தொழிற்சாலையில் நல்ல குடிநீர், கழிப்பிடம், முதலு தவி பெட்டி, எட்டு மணி நேர வேலை, இஎஸ்ஐ, பிஎப், அடையாள அட்டை உள்ளிட்ட அரசின் சட்ட சலுகை களை அளிக்க வேண்டும். மே தினம் விடுமுறை உள்ளிட்ட 9 தேசிய பண்டிகைகளுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண் டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும், தற்போது வரை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உடனே பேசி தீர்வு காண வேண்டும். இந்த கூலி உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டுமென வலி யுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத் தறி தொழிலாளர் சங்கத்தினர் காவேரி ஆர்.எஸ். பகுதியில் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.முத்துக் குமார் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.அசோகன், சிஐடியு மாவட்ட உதவிச்செயலாளர் எஸ். சுரேஷ், சங்க ஒன்றியச் செயலா ளர் கே.குமார் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவி வாழ்த்திப் பேசினார். இதில் விசைத்தறி சங்கப் பொரு ளாளர் செங்கோட்டையன் மற்றும் சங்க ஒன்றிய நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள், விசைத்தறி தொழி லாளர்கள் பங்கேற்றனர்.</p>
