தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

9.75% போனஸ்: விசைத்தறித் தொழிலாளர்கள் பிரச்சாரம்

30 Oct 2026, 12:47 am
9.75% போனஸ்: விசைத்தறித் தொழிலாளர்கள் பிரச்சாரம்

9.75% போனஸ்: விசைத்தறித் தொழிலாளர்கள் பிரச்சாரம்

நாமக்கல், அக்.29-விசைத்தறித் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே 9.75% போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறித் தொழிலில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும், விசைத்தறி உரிமையார்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு இடையே 28.10.2024 அன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2025-26 ஆம் ஆண்டிற்கு 9.75 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, விசைத்தறி நிர்வாகங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்க வேண்டும். மேலும், கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 17 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், 75 சதவீதம் உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக விசைத்தறி நிர்வாகங்கள் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண முன்வரவில்லை. சேலம் தொழிலாளர் துறை அதிகாரிகள் நான்கு முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், விசைத்தறி நிர்வாகங்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று காவேரி ஆர்.எஸ். பகுதியில் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இந்த இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.முத்துகுமார் தலைமை வகித்தார். விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் சிறப்புரையாற்றினார். மேலும், சங்க உதவிச் செயலாளர் கே.குமார்,தையல் சங்கத்தை சேர்ந்த அண்ணாதுரை, விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.