சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டம்
21 Jun 2026, 2:24 am
<p><strong>சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூன் 20- வீரப்பம்பாளையம் பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனிந பர் ஆக்கிரமித்ததை கண்டித்து சமூக ஆர்வ லர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே களியனூர் வீரப்பம்பாளையம் பகுதி யில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் நுழைவு வாயில் அமைத்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்க ளுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்களான வினோத்குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கடந்த ஆண்டு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினர். அதன் அடிப்படை யில் களியனூர் அக்ரஹாரம் ஊராட்சி நிர்வா கத்திற்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவ டிக்கை எடுக்க உத்தரவு அனுப்பப்பட்டது. தொடர்ந்து வருவாய்த் துறையினர் நில அள வீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவ டிக்கை மேற்கொண்டனர். கடந்த வியாழக்கிழமை நில அளவை யர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர் வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத் தில் ஆய்வு மேற்கொண்டபோது, ஆக்கிர மிப்பு செய்ததாக கூறப்படும் நபர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் சமூக ஆர் வலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் போலீசார் வராததால் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்ற னர். இதனால் அதிருப்தியடைந்த சமூக ஆர்வ லர்கள் வினோத்குமார், பிரகாஷ் ஆகியோர் “நடவடிக்கை எடு”என எழுதிய பதாகை களை ஏந்தி பள்ளிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். பின்னர் வட்டாட்சியரிடம் மனு அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி னர். மனுவை பெற்ற வட்டாட்சியர், உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தார்.</p>
