முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

27 May 2026, 11:42 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மரத்தை வெட்டிய நகராட்சி ஊழியர்கள்!

நாமக்கல், மே 27- நாமங்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஞாயிறன்று வீசிய சூறாவளி காற்றால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப் பாக, புதுப்பாளையம் சாலை வீட்டு வசதி வாரிய குடியி ருப்புப் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே இருந்த மரங்களும் விழுந் தன. இவற்றை அகற்ற புத னன்று வந்த நகராட்சி ஊழி யர்கள், மழையால் விழுந்த மரங்களை விடுத்து, அப் பகுதிக்கு நிழல் தந்து வந்த சுமார் 60 ஆண்டுகள் பழமை யான, நன்றாக இருந்த பெரிய மரம் ஒன்றை எவ் வித முன்னறிவிப்பும் இன்றி வெட்டிச் சாய்த்தனர். இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பியபோது, ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மரங்களை வளர்ப்பதே கடினமாக உள்ள சூழலில், பசுமையாக இருந்த மரத்தை வெட்டிய நகராட்சி அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்ப டுத்தியுள்ளது.

பவானிசாகர் அணை நீர்மட்டம்:

57.46/105அடி நீர்வரத்து: 69 கனஅடி நீர்திறப்பு: 900 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:25.68/72 அடி நீர்வரத்து:125கனஅடி நீர்திறப்பு:1025கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:24.65/160 அடி நீர்வரத்து:138.28கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:65.40/120அடி நீர்வரத்து:237கனஅடி நீர்திறப்பு:192கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:55.46/60அடி நீர்வரத்து:841கனஅடி நீர்திறப்பு:515கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:30.25/90அடி நீர்வரத்து:124கனஅடி நீர்திறப்பு:கனஅடி

Share
FacebookXWhatsAppTelegram