முந்தய பக்கம்

​​​​​​​கிடப்பில் சாலைப்பணி

22 May 2026, 12:15 am
​​​​​​​கிடப்பில் சாலைப்பணி
<p><strong>​​​​​​​கிடப்பில் சாலைப்பணி</strong></p><p>நாமக்கல், மே 21- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளை யம் முதல் வேளாங்காடு வரையிலான தார் சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்ற னர். மிகவும் சேதமடைந்திருந்த இந்த சாலையை புதி தாக அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலை யில், ஜல்லிகள் கொட்டப்பட்ட பிறகு பணிகள் நிறுத் தப்பட்டது. இதனால் சாலையில் நடந்து செல்ல கூட சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். மேலும், இப்பகுதியில் உள்ள வீரமாத்தி யம்மன் கோவில் திருவிழா இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளதால், சாலைப் பணிகளை உடனடி யாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் பணி தொடங்கப்படாவிட்டால் போராட் டத்தில் ஈடுபடவும் ஆலோசித்து வருவதாக தெரி வித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram