தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மயான இடத்தில் மண் திருட்டு சடலம் புதைக்க வழியின்றி தவிப்பு

15 Jul 2026, 10:54 pm
மயான இடத்தில் மண் திருட்டு சடலம் புதைக்க வழியின்றி தவிப்பு

மயான இடத்தில் மண் திருட்டு சடலம் புதைக்க வழியின்றி தவிப்பு

நாமக்கல், ஜூலை 15- குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் மயான இடத்தில் மண் திருடி, அந்த இடம் பள்ள மாகி தண்ணீர் தேங்கியதால், சடலம் புதைக்க வழி இல்லா மல் துக்க வீட்டார் அவதியுற்றனர். பின்னர் வருவாய்த் துறை, காவல்துறையினர் இணைந்து சமரசம் செய்த பின் சடலத்தை ஏரியூட்டினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள சமய சங்கிலி ஊராட்சிக்குட்பட்ட சீராம் பாளையம் கிரா மத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினருக்கு இறந்தவர்களின் சட லங்களை புதைப்பதற்காக காவிரி ஆற்றின் கரையோரம் வருவாய்த்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த சமூகத்தினர் தொடர்ந்து சடலங்களை புதைத்து வந்தனர். இந்நிலை யில் செவ்வாயன்று மாலை சீராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் உயிரிழந்ததால், அவரது சடலத்தை புதைப்பதற்கு தங்கள் மயானத்திற்கு வந்த பொழுது, மயானத்தில் பெரும்பகுதி குழி தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் அங்கு நீர் தேங்கி சடலம் புதைக்க வழியில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட் டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து, சமய சங்கிலி மற்றும் குமாரபாளையம் அக்ரஹார கிராம நிர்வாக அலு வலர்கள் செந்தில் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காவல்துறை ஆய்வாளர்கள் குமாரபாளையம் தாமரைச்செல்வன், பள்ளிபாளையம் சிவக்குமார் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மயானத்திற்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தருவதாகவும், தற் போது சடலத்தை எரியூட்டி இறுதி காரியங்கள் செய்ய கேட்டுக் கொண்டதன் பேரில், பொதுமக்கள் சமரசம் ஏற் பட்டு சடலத்தை எரியூட்டினர். சடலம் புதைக்கக் கூடிய இடத்தில் குழி தோண்டி மண் எடுத்துச் சென்ற நபர்கள் குறித்து வருவாய்த்துறையினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் மண் எடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.