குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி; மறியல்
10 Oct 2026, 3:15 am

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி; மறியல்

நாமக்கல், அக்.9-குடிநீர் தட்டுப்பாடு திருச்செங்கோடு அருகே காடசநல்லூர் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில், ஆவேசமடைந்த மக்கள் வியாழனன்று சாலையில் அமர்ந்துமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடசநல்லூர் ஊராட்சிப்பகுதியில்ராமதாஸ் நகர், சத்யா நகர் உள்ளிட்ட ஏராளமான கிராமப்புற பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளது. இங்கு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாகவே முறையான குடிநீர் வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஊருக்குள் குடிநீர் கொண்டு வரும் குடிநீர் குழாயில் பழுகு ஏற்பட்டு கடந்து ஒரு மாதத்திற்கு மேலாகவே சரி செய்யும் பணிகள் நடைபெறவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம் சாலையில் சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாகவே மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பள்ளிபாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.