காலமானார்
7 Jan 2026, 4:05 pm
<p>நாமக்கல், ஜன. 7- ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில், திருச்செங்கோடு தாலுகாவிற்குட்பட்ட நல்லிபாளையம் கிராமத்தில், சாதாரண விவசாயக் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னனி ஊழியராகவும், விதொச முதல் மாவட்டச்செயலாளராகவும் மிளிர்ந்த மூத்த தோழர் பி.செங்கோடன் செவ்வாயன்று காலமானார். 1962 களில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் தொழிலாளி யாக வேலைக்கு சேர்ந்த தோழர் செங்கோடன், தொழிற் சங்கத்தில் இணைந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு ஏற்பட்டு கம்யூனிஸ்ட் ஆக மாறினார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும், 1995 ஆம் ஆண்டு விவசாய சங்கத்தி லிருந்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் விவசாய தொழிலா ளர் சங்கம் பிரித்து உருவாக்கப்பட்டபோது அதன் முதல் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார். நாமக்கல் மாவட் டச் செயலாளர், மாவட்டத் தலைவர், மாநில தலைவர்களில் ஒருவர் என்கிற அளவில் பொறுப்புகளை திறம்பட ஏற்று நடத்தியவர். பொதுவுடமை கொள்கையை நெஞ்சில் ஏந்தி அர்ப்பணிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்த தோழர் செங்கோடன் செவ்வாயன்று காலமானார். தோழர் செங்கோடன் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் எலச்சிபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் தலைமை வகித் தார் . முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பி.டெல்லி பாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், என்.வேலுசாமி, தங்கமணி, கண்ணன், சந்திரமதி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆதிநாராயணன் உள்ளிட்ட வர்க்க, வெகு ஜன இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.</p>
