முந்தய பக்கம்

கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் பட்டதாரி இளைஞர்கள்

5 Jun 2026, 10:14 pm
கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் பட்டதாரி இளைஞர்கள்
<p>நாமக்கல், ஜூன் 5- </p><p>ராசிபுரம் அருகே கைவினைப் பொருட்களை பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், கைவினை பொருட்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்பவரது மகன்கள் கார்மேகம்(28), மாணிக்கம்(26) ஆகிய இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்களது குடும்ப தொழி லாக கைவினைப் பொருட்களை தயாரித்து விற் பனை செய்து வரும் நிலையில், தொழிலின் மீது ஆர்வம் ஏற்படவே அவர்களும் தனியார் நிறுவன பணியை கைவிட்டு கைவினை பொருட்களை தயா ரித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதி விட்டு வருகின்றனர். இதுகுறித்து கார்மேகம் கூறுகையில், சிறப்பாகவும், நேர்மையாகவும் செய் வதால் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணி தங்களுக்கு மிகவும் பிடிப்பதாகவும், கைவினை அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யும் வகையிலும், ஊக்குவிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram