விடுதியில் அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்: அதிகாரிகள் உறுதியளித்ததால் வாபஸ்
22 Sept 2026, 11:56 pm

விடுதியில் அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்: அதிகாரிகள் உறுதியளித்ததால் வாபஸ்

நாமக்கல், செப். 22– நாமக்கல் மோகனூர் லத்துவாடி பகுதியில் இயங்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி சமூகநீதி விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்த காத்திருப்புப் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இக்கல்லூரி அருகில் உள்ள 200 மாணவர்கள் தங்கும் சமூகநீதி விடுதியில், போதிய சமையலர்கள் இல்லை. விடுதி ஒதுக்கீடு கிடைக்காத 250-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மாணவர்கள் வேறு வழியின்றி அங்கேயே தங்கிப் படிக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் மாணவர்களுக்கு போதிய உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிப்பதற்கான நீர் வசதி கிடைக்காமல் கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதனை கண்டித்தும், அடிப்படை வசதிகளை வலியுறுத்தியும் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம்அறிவித்திருந்தது. இதையடுத்து செவ்வாயன்று, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர், மாணவர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் கூறுகையில், “விடுதி மாணவர் எண்ணிக்கையை 400 ஆக உயர்த்த வேண்டும், புதிய கட்டிட வசதி செய்து தரும் வரை தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தடையின்றி உணவும் குடிநீரும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது” என்றார்.

இப்பேச்சுவார்த்தையின் போது விடுதி உபக்குழு ஒருங்கிணைப்பாளர் கவின், நிர்வாகிகள் மனோஜ், சுரேஷ்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.