தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்

19 May 2026, 11:51 pm
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
<p><strong>சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்</strong></p><p>​​​​​​​நாமக்கல், மே 19- வளையப்பட்டி பகுதியில் விவ சாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத் தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று நூதன முறையில் விசில் ஊதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், வளையப் பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் பயன்பாட்டிலுள்ள ஆயி ரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங் களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட் டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்ப டும் என்றும், பல கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியா கும் என்றும் அப்பகுதி விவசாயி கள் தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து கடந்த சில மாதங் களாக, சிப்காட் எதிர்ப்பு இயக்கம், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக ஆர்ப்பாட் டங்கள் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன் தொடர்ச்சியாக நாமக் கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாய முன்னேற் றக் கழகத்தினர் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் இணைந்து செவ்வாயன்று கவனயீர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத் திற்கு விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் கே.பாலசுப்பி ரமணியன் தலைமை வகித்தார். பின்னர் அனைவரும் ஒரே நேரத் தில் விசில்ஊதி சத்தம் எழுப்பி அர சின் கவனத்தை ஈர்க்க முயன்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.