நாமக்கல்லில் சிப்காட் எதிர்ப்பு மீண்டும் தீவிரம்
13 May 2026, 1:44 am

நாமக்கல்லில் சிப்காட் எதிர்ப்பு மீண்டும் தீவிரம்

நாமக்கல், மே 12- நாமக்கல்லில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனுவை அளித்த னர்.

நாமக்கல் அருகே வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு கடந்த 2024 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

இதற்காக அப்பகுதியில் உள்ள புறம் போக்கு மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் பல் வேறு கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள தடுப்பணைகள், நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களை மறைத்து, பயன்பாடு அற்ற தரிசு நிலங் களாக அரசு அதிகாரிகள் தவறான அறிக்கை அளித்ததாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், திங்களன்று நாமக் கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட் டத்தில் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில், பயன்பாட்டில் உள்ள விவசாய நிலங்கள் குறித்து தவறான அறிக்கை அளித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஏற்கனவே அளிக்கப் பட்ட புகார்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என் பது குறித்து விளக்கம் அளிக்க வேண் டும்.

மேலும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்.

விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.