தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாவட்ட கிளை நூலகத்திற்கு கழிவறை வசதி ஏற்படுத்திடுக

25 May 2026, 11:17 pm
மாவட்ட கிளை நூலகத்திற்கு கழிவறை வசதி ஏற்படுத்திடுக
<p><strong>மாவட்ட கிளை நூலகத்திற்கு கழிவறை வசதி ஏற்படுத்திடுக</strong></p><p>​​​​​​​நாமக்கல், மே 25- எலச்சிபாளையத்தில் செயல் பட்டு வரும் மாவட்ட கிளை நூல கத்திற்கு உடனடியாக கழிப்பறை வசதி அமைத்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் திங்களன்று மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில், நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எலச்சிபாளையம் காவல் நிலையம் பின்புறம் மாவட்ட கிளை நூலகம் கடந்த 30 ஆண்டுக ளாக செயல்பட்டு வருகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங் களுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த நூலகம் பயன்பட்டு வருகிறது. 15 ஆண்டுக ளுக்கு முன்பு பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் ஏ.கே.பி.சின்ராஜ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டது. ஓராண்டுக்கு முன்பே கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து நூலகம் செயல்பட்டிற்கு வந்தாலும், இது வரை பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவில்லை. நூலகத் திற்கு வரும் மாணவர்கள், பெண் கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். கழிப்பறை அமைக்க தேவையான மலக்குழி இருந்தும் கட்டிடம் அமைக்கப்படாதது வேதனைக் குரியது. இதுதொடர்பாக ஏற்க னவே மூன்று முறை மனு அளித் தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. அதேபோல், குமாரமங்கலம் அருகே சக்திநாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாளையம் அம்மன் நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் களுக்கு ஆதரவாக சாலை அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டு தல் வழங்க வேண்டும் எனக்கோரி, தனி மனுவும் ஆட்சியரிடம் அளிக் கப்பட்டது. இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ் வரன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.