தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடும் வெப்பத்தால் நாள் ஒன்றுக்கு 1 கோடி முட்டை உற்பத்தி சரிவு

16 Jul 2026, 10:20 pm
கடும் வெப்பத்தால் நாள் ஒன்றுக்கு 1 கோடி முட்டை உற்பத்தி சரிவு
<p><strong>கடும் வெப்பத்தால் நாள் ஒன்றுக்கு 1 கோடி முட்டை உற்பத்தி சரிவு</strong></p><p>நாமக்கல், ஜூலை 16- கடும் வெப்பம், தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மற் றும் பராமரிப்பு செலவு அதிகரித் துள்ளதால் முட்டை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாகவும், ஒரு முட்டையின் கொள் முதல் விலை ரூ.7 இருந்தால்தான் கோழிப்பண்ணை தொழிலை லாப கரமாக நடத்த முடியும் என்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரி வித்தார். நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) சார்பில், கோழிப் பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம் நாமக்கல்லில் வியாழ னன்று தனியார் அரங்கத்தில் நடை பெற்றது. என்இசிசி மண்டல தலை வரும், தமிழ்நாடு கோழிப்பண்ணை யாளர்கள் சங்க தலைவருமான சிங்கராஜ் இதுகுறித்து செய்தியா ளர்களிடம் கூறுகையில், நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டையின கோழிகள் 1,000 க்கும் மேற்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. 2 மாதங்கள் முன்பு நாள் ஒன்றுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட் டன. தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்தால், கோழிகளில் தீவன எடுப்பு குறைந்து, முட்டை உற்பத்தி சுமார் 15 சதவீதம் சரிந்துள்ளது. இத னால், தற்போது நாள் ஒன்றுக்கு 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய் யப்படுகின்றன. பல இடங்களில் தண்ணீர் வறண்ட நிலையில் பல பண்ணையாளர்கள் கோழி களுக்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோழித்தீவினத்திற்கு தேவையான மக்காசோளம், சோயா புண்ணாக்கு, தவிடு போன்ற மூலப் பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில், ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால் தீவன விலை உயர்ந்து, முட்டையின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு முட்டையின் பண்ணைக்கொள் முதல் விலை ரூ.6.80 ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை ரூ.7க்கு விற்பனை செய்தால் தான் கோழிப்பண்ணைகளை லாபகர மாக நடத்த முடியும். ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக்கழக (எப்சிஐ) குடோன் களில், உணவுக்குப் பயன்படாத சோளம், கம்பு, கோதுமை உள் ளிட்ட மூலப்பொருட்கள் ஆயிரக் கணக்கான டன் வீனாகி வருகிறது. அவற்றை கோழி மற்றும் கால் நடை தீவனத்திற்காக, பண்ணை யாளர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.