நாமக்கல் முட்டை விலை வீழ்ச்சி
17 Jan 2026, 2:42 pm
<p><strong>நாமக்கல் முட்டை விலை வீழ்ச்சி</strong></p>
<p>நாமக்கல், ஜன. 17- கடந்த மாதம் நாமக்கல் முட்டை விலை உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது படிப்படியாக முட்டை யின் விலை வீழ்ச்சியடைந்து வருகி றது. இது முட்டை பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. தென்னிந்தியாவின் ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக் கல் மாவட்டம், முட்டை உற்பத்தியில் உலகளவில் புகழ் பெற்றது. இங் குள்ள ஆயிரக்கணக்கான கோழிப் ப்பண்ணைகள் மூலம் நாளொன் றுக்கு சுமார் 4 முதல் 5 கோடி முட்டை கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாள்தோறும் சுமார் 80 லட்சம் முட்டைகள் வெளி மாவட்டங்களுக் கும், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் கடும் குளிர் மற்றும் நுகர்வு அதிகரிப்பு கார ணமாக முட்டை விலை முன்னெப் போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு முட்டை யின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.80 காசுகள் வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு முட்டை சார்ந்த உணவு விடுதி உரிமையாளர்கள் மற் றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் முட்டை விலை கணிசமா கக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ரூ. 6.60 ஆக இருந்த விலை, தற்போது மேலும் சரிவடைந்துள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப் புக்குழு (NECC) மண்டலத் தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் தில், முட்டை விலையை ஒரே நாளில் 30 பைசா குறைக்க முடிவெடுக்கப்பட் டது. இதன் மூலம் பண்ணைக் கொள் முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி பற்றி முட்டை வியாபாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி மக் கள் சைவ உணவிற்கு மாறுவதால் முட்டை நுகர்வு குறைந்துள்ளது. மேலும், ஐயப்ப பக்தர்களின் மாலை அணிவிக்கும் காலம் என்பதால் முட் டைக்கான தேவை சரிந்துள்ளது என்றனர். முட்டை விலை சரிவடைந்துள்ள தால், கேக் தயாரிப்பாளர்கள், துரித உணவு கடை உரிமையாளர்கள் மற் றும் முட்டை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், கோழித் தீவன விலை உயர்ந்து வரும் சூழலில், கொள்முதல் விலை குறைவது பண்ணையாளர்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்ப டுத்தும் என்ற கவலையும் எழுந்துள் ளது. வரும் நாட்களில் தேவை அதி கரிப்பைப் பொறுத்தே விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p>
<p> </p>
