நாமக்கல் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில்...
29 Mar 2026, 3:34 pm
<p><strong>நாமக்கல் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில்... </strong></p>
<p>நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக 5 இடங்களிலும், கொமதேக 1 இடத்திலும் போட்டியிட உள்ளது. அதன்படி, குமாரபாளையம்: எஸ்.பாலு(திமுக) இவர் இரண்டு முறை பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும், இரண்டு முறை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களம் காண் கிறார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் முன் னாள் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து களம் காண் கிறார். பரமத்தி - வேலூர்: கே.எஸ்.மூர்த்தி(திமுக) திமுக மேற்கு மாவட்ட செயலாளராக இருக் ்கும், இவர் பி.எஸ்.சி. படித்துள்ளார். பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மூன்றா வது முறையாக போட்டியிடுகிறார். ராசிபுரம்(தனி): மருத்துவர் மதிவேந்தன்(திமுக) தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் இவர், எம்பிபிஎஸ்.,எம்.டி. படித்துள்ளார். திமுகவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு போட்டியிட்ட முதல் தேர்தலிலே முன்னாள் அதிமுக அமைச்சர் வி.சரோஜாவை வீழ்த்தினார். நாமக்கல்: ப.ராணி(திமுக) இவர் எம்.ஏ., எல்.எல்.பி., படித்துள்ளார். திமுக மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளராக பணி யாற்றி வரும் ப.ராணி, நாமக்கல் மாநகராட்சி கவுன் சிலராகவும், கொண்டுசெட்டிபட்டி கிராம பஞ்சாயத்து தலைவராகவும், நாமக்கல் பஞ்சாயத்து யூனியன் சேர் மேனராகவும் பணியாற்றியுள்ளார். முதல் முறையாக அவ ருக்கு நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியி டுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேந்தமங்கலம் (தனி): பி.பூமலர்(திமுக) சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பொன்னுசாமி அவர்களின் மகள் பி.பூமலர் ஆவார். திருச்செங்கோடு: இ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரான இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு திருச் செங்கோடு சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பொன். சரஸ்வதியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.</p>
