தொடர் மின் தடை - சிபிஎம் மனு
8 Jun 2026, 11:01 pm
<p><strong>தொடர் மின் தடை - சிபிஎம் மனு</strong></p><p>நாமக்கல், ஜூன் 8- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கொளந்தாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தொடர் மின்வெட்டு பிரச்சினையை தீர்க்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னை யார் கிராமம், கொளந்தாங்காடு பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு சாலை, தெருவிளக்கு, குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அள வில் இல்லை. மேலும், எலச்சிபாளையம், பள்ள காடு, அத்திமரப்பட்டி, அகரம் கொத்தம்பாளையம், படுவக்காடு, கருமா கவுண்டம்பாளையம், நல்லாம் பாளையம், அயித்தாகுட்டை, கொன்னையார், இலுப்புலி, கிளாப்பாளையம், தச்சங்காடு, மடை யன்காட்டுபுதூர் மற்றும் கரட்டுப்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக மின் கம்பிகள் பல ஆண்டுகளாக சென்று வருகின் றன. இந்த பகுதிகளில் சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் போன்ற உயரமாக வளரும் மரங்கள் மின்கம்பிக ளுக்கு அடியில் நடப்பட்டுள்ளதால், மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மரக்கிளைகள் மின் கம்பிகளைத் தொட்டு அடிக்கடி மின்தடை ஏற்படு கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். எனவே, மின்கம்பிகள் செல்லும் பகுதிகளில் உய ரமாக வளரும் மரங்களை நடக்கக் கூடாது என சம் பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்களுக்கு மின்சாரத் துறை மூலம் அறிவுறுத்த வேண்டும். மேலும், தொடர்ச்சியான மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலச்சிபாளையம் சிபிஎம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் இந்த மனு அளிக் கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர்.</p>
