நாமக்கல் மாவட்டத்தில் 142 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்
17 Aug 2026, 9:02 pm
<p><strong>நாமக்கல் மாவட்டத்தில் 142 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், 142 தீக்கதிர் சந்தாக்கள், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணனிடம் வழங்கப்பட்டன. தீக்கதிருக்கான பொறுப்பாளர் கே. தங்கமணி தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ரங்கசாமி, எம். அசோகன், என். வேலுச்சாமி, எஸ். சுரேஷ், ஏ.டி. கண்ணன், எம்.ஆர். முருகேசன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
