ஒற்றைக் கையில் அசத்தல் திறமை
10 May 2026, 12:28 am

ஒற்றைக் கையில் அசத்தல் திறமை

நாமக்கல், மே 9- ஒற்றைக் கையால் தரையில் 12 நிமிடத்தில் 1288 முறை பந்தை அடித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து 4 வயது சிறுவன் சாதனை படைத்தார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ராஜவீதி பகுதியை சேர்ந்த மணி கண்டன் காயத்ரி ஆகியோரின் இரண்டாவது மகன் ரித்திக் தேவ் நான்கரை வயது சிறுவனான இவர் குமாரபாளையம் தனியார் பள்ளியில் ப்ரீ கேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் விளையாட்டுத் துறையில் ஆர்வம் மிகுந்த சிறுவனாக இருக்கும் ரித்திக் தேவ், கால்பந்தாட்டத்திற்கு பயன்படுத்தும் பந்தை அவ்வப்போது தரையில் அடித்து ஆர்வமு டன் விளையாடி வந்துள்ளார்.

இதனை கவனித்த இவ ருடைய தந்தை மணிகண்டன் அதை 12 நிமிடங்கள் கொண்ட வீடியோவாக எடுத்துள்ளார்.

அதில் 1288 முறை ஒற்றை கையால் 12 நிமிடம் விடாமல் அவர் பந்தை தரையில் அடித்தது பதிவாகி இருந்தது. இதனையடுத்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு இந்த வீடியோவை மணிகண்டன் அனுப்பிய நிலையில், அந்த நிறுவனம் அண்மை யில் சிறுவனை பாராட்டி சான்றிதழ்களும் பதக்கங்க ளும் வழங்கி பாராட்டு தெரிவித்தது.