நாமக்கல் புத்தகத் திருவிழா துவக்கம்!
2 Oct 2026, 1:00 am
<p><strong>நாமக்கல் புத்தகத் திருவிழா துவக்கம்!</strong></p><p>நாமக்கல், அக்.1-நாமக்கல்லில் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன், தொடங்கிவைத்து பார்வையிட்டார்.</p><p>பாரதி புத்தகாலயம் சார்பில், நாமக்கல் - துறையூர் சாலை, மாநகராட்சி திருமண மண்டபத்தில் நம்ம ஊருபுத்தகத் திருவிழா எனும்தலைப்பில் வியாழனன்று புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த கண்காட்சியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன், தொடங்கி வைத்துபார்வையிட்டார். முன்னதாக புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாகநடைபெற்ற தொடக்க விழா நிகழ்விற்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் கல்லூரி முதல்வர் தி.பாரதி தலைமை வகித்தார். பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் நாகராஜன் வரவேற்றார். மூத்த முதன்மை விஞ்ஞானி கு.சி.அய்யப்பன், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சண்.செல்வ பாலாஜி, மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புத்தகவிற்பனையை எழுத்தாளர் பொ.வேலுச்சாமி தொடங்கிவைத்தார். நாமக்கல் சனு இன்டர்நேஷனல் ஹோட்டல் சேர்மன் சத்தியமூர்த்தி புத்தகத்தை பெற்றுக் கொண்டார். நிகழ்வின் நிறைவாக புத்தக ஆர்வலர் எம்.ஆர்.முருகேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை கல்வி செயற்பாட்டாளர் ஏ.டி.கண்ணன் செய்திருந்தார்.</p>
