மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
5 Jun 2026, 10:03 pm
<p>நாமக்கல், ஜூன் 5-</p><p>ஆவரங்காடு அரசுப் பள்ளி யில் உரிய பாதுகாப்பு வசதி கள் செய்து கொடுக்காத நிலையில் சமூக விரோதிகள் உள்ளே நுழைவதாகவும், மாணவர்க ளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற் றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம், ஆவரங்காடு பகுதியில் கிருஷ்ண வேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதி யில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாண விகள் பயிலும் மிகப்பெரிய அரசுப் பள்ளியாகவும், நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள முக்கியக் கல்வி நிறு வனமாகவும் இது திகழ்கிறது. இப் பள்ளியின் பழைய சுற்றுச்சுவர் தரம் குறைந்த நிலையிலும், மிகக் குறைந்த உயரத்திலும் இருந்ததால், மாணவிக ளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனையடுத்து, பள்ளியை சுற்றிலும் புதிய தடுப்புச்சுவர் அமைக் கும் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணி கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. கோடை விடுமுறை காலத்திலேயே இப்பணிகள் தொடங்கப் பட்ட போதிலும், தற்போது வரை மிக மந்தகதியிலேயே பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி செயல்பட துவங் கிய நிலையிலும் இன்னும் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப் படாததால், பகல் நேரங்களிலேயே போதை ஆசாமிகள், சமூக விரோதி கள் நுழைகின்றனர். மேலும், தெரு நாய்கள் பள்ளி வளாகத்திற்குள் எளி தாக வருகின்றன. அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அமர்வது, தூங்குவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவ தால், மாணவிகள் கடும் அச்சத்திற்கும், பாதுகாப்பற்ற சூழலுக்கும் தள்ளப்பட் டுள்ளனர். எனவே, மாணவிகளின் பாதுகாப் பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர் வாகமும் பள்ளி கல்வித்துறையும் உடனடியாக தலையிட்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரையிலும், தற்காலிக ஏற்பாடாக பள்ளியை சுற்றி லும் பச்சை வலை அமைத்துப் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
