இலவச வீட்டு மனை கோரி மனு
6 Jul 2026, 10:16 pm
<p><strong>இலவச வீட்டு மனை கோரி மனு</strong></p><p>நாமக்கல், ஜூலை 6- ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்திற் குட்பட்ட ஆர்.பட்டணம், ராசிபுரம் நகரம் உள் ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரை திங்க ளன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். இந்நிகழ்வில், சங்க மாவட்டத் தலைவர் ராணி, செயலாளர் செல்வராணி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் பய னாளிகள் கலந்து கொண்டனர்.</p>
