தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கருவிலிருந்த 8 மாத சிசு உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை

25 May 2026, 1:30 am
கருவிலிருந்த 8 மாத சிசு உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை
<p><strong>கருவிலிருந்த 8 மாத சிசு உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை</strong></p><p>​​​​​​​நாமக்கல், மே 24- எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட கர்ப்பிணியின் கரு விலிருந்த 8 மாத சிசு உயிரிழந்த சம்ப வத்தை கண்டித்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே உள்ள வெப்படை பகுதியை சேர்ந்த காசிராஜா (21) என்பவரின் மனைவி கௌசல்யா (21). கர்ப்பிணி யாக இருந்து, எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆரம் பக்கட்ட பரிசோதனைகள் மேற் கொண்டு வந்தார். இதன்பின் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று தொடர்ந்து பரிசோதனை செய்து வந்துள்ளார். ஜூலை மாதத் தில் குழந்தை பிறக்கும் தேதி தெரிவிக் கப்பட்டிருந்த நிலையில், சனியன்று திடீ ரென கௌசல்யாவுக்கு பணிக்குடம் உடைந்துள்ளது. இதையடுத்து, அவரை அருகிலிருந்த எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காசிராஜா கொண்டு சென்றார். அப் போது இரவு நேரம் என்பதால் மருத்து வர்கள் இல்லாமல், சில செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப் படுகிறது. பணிக்குடம் முழுமையாக உடைந்ததால், வேறு மருத்துவ மனைக்கு மாற்றினால் தாய் மற்றும் சேய்க்கு ஆபத்து ஏற்படலாம் என கரு திய சுகாதார நிலைய ஊழியர்கள், அங் கிருந்தபடியே பிரசவ முயற்சியில் ஈடு பட்டனர். ஆனால், கருவிலிருந்த 8 மாத ஆண் சிசு சலனமற்ற நிலையில் வெளியே வந்தது. பின்னர் வந்த மருத்து வர்கள், குழந்தை வயிற்றிலேயே மூச் சுத்திணறி உயிரிழந்ததாக தெரிவித்த னர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சிய டைந்த உறவினர்கள், போதிய மருத்து வர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என குற்றம்சாட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வெப் படை காவல் துறையினர், உறவினர் களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்த னர். வெப்படை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் நிலையில், 24 மணி நேர மும் செயல்படும் அவசர சிகிச்சை மற் றும் பிரசவ வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.