தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

22 தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

24 May 2026, 1:02 am
22 தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

22 தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

நாமக்கல், மே 23- நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 22 தனியார் பள்ளிகளில், 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித் துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, நாமக் கல் மாவட்டத்தில் தற்போது 237 தனி யார் பள்ளிகள் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் இதில் 22 பள்ளிகள் உரிய அங்கீகா ரம் மற்றும் அனுமதியின்றி செயல் பட்டு வந்தது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் அரசு விதிகளின்படி தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அனு மதி பெறுவதற்காக போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இருப்பினும், பள்ளி நிர்வாகங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கா மல் தொடர்ந்து செயல்பட்டு வந்த தாக கூறப்படுகிறது.

மாணவர்களின் பாதுகாப்பு, கல்வித் தரம் மற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் போன்ற அம் சங்களை கருத்தில் கொண்டு, நடப்பு கல்வியாண்டு முதல் இந்த பள்ளிகள் செயல்படக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள் ளது. மேலும் எல்.கே.ஜி. முதல் எந்த வகுப்பிற்கும் புதிய மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும், அரசு உத்தரவை மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டாலோ அல்லது பள்ளி கள் தொடர்ந்து செயல்பட்டாலோ சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் பெற் றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்து, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள் ளார்.

பள்ளிகளின் அங்கீகார நிலை குறித்து சந்தேகம் இருப்பின் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொண்டு உறுதி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட பள்ளிகளில் நாமக்கல் டைம் கிட்ஸ் நர்சரி ஸ்கூல், ஏபிசி கிட்ஸ், ஹனி பனி கிட்ஸ், ஆரஞ்சு அகாடமி, சன் பிள வர், அக்ஸ்ரம், ஸ்பார்க்கில் அகா டமி, யுரோ கிட்ஸ், மகிழம், துளிர், ஸ்கூல் ஆப் மாண்ட்டசரி உள்ளிட்ட பல பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் செல்லப்பம்பட்டி, எர்ணா புரம், நல்லிபாளையம், சேந்தமங்க லம், பொத்தனூர், எருமப்பட்டி, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதி களில் செயல்பட்டு வந்த பள்ளிக ளும் இந்த பட்டியலில் உள்ளன.

அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் பள்ளிகளில் மாணவர் களை சேர்ப்பது எதிர்காலத்தில் கல்விச்சான்றிதழ் மற்றும் சட்ட சிக் கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ப தால், பெற்றோர்கள் முழுமையான தகவல்களை சரிபார்த்து பள்ளி களை தேர்வு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலை யில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 22 தனியார் பள்ளிகளை சேர்ந்த பெற்றோர் களிடையே இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே மாத துவக்கத்திலேயே இது போன்ற ஆய்வுகளை உடனடியாக மேற்கொண்டு இருந்தால் தங்க ளது குழந்தைகளை வேறு பள்ளி யில் சேர்ப்பதற்கான கால அவகா சங்கள் கிடைத்திருக்கும்.

ஆனால் இன்னும் ஒரு வார காலத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப் பட உள்ள நிலையில், இந்த திடீர் உத்தரவு காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் குழந் தைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று பெற்றோர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.