முந்தய பக்கம்

மயங்கி விழுந்த பெண்ணின் பணம், நகைகளை ஒப்படைத்த 108 ஊழியர்கள்

15 Jun 2026, 11:56 pm
மயங்கி விழுந்த பெண்ணின் பணம், நகைகளை ஒப்படைத்த 108 ஊழியர்கள்
<p><strong>மயங்கி விழுந்த பெண்ணின் பணம், நகைகளை ஒப்படைத்த 108 ஊழியர்கள்</strong></p><p>நாமக்கல், ஜூன் 15– நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், அவரிடம் இருந்த ரூ.21,500 ரொக்கம் மற்றும் தங்க நகைகளை உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மைக்குக் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லலிதா (60), உதகையில் பணியை முடித்து சொந்த ஊருக்கு திரும்பியபோது நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். தகவலறிந்த எர்ணாபுரம் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு முதலுதவி அளித்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது கைப்பையில் ரூ.21,500 ரொக்கம், தங்க நகைகள் மற்றும் கைபேசி இருந்தது கண்டறியப்பட்ட நிலையில், அவற்றை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் சந்தோஷிடம் அனைத்துப் பொருட்களும் முறையாக ஒப்படைக்கப்பட்டன. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சம்பத் மற்றும் மருத்துவ உதவியாளர் மோகனப்பிரியாவின் நேர்மை, மனிதநேய செயல்பாட்டை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram