நல்லாற்றை தூர்வாரும் பணி துவக்கம்!
15 Jul 2026, 10:57 pm
<p><strong>நல்லாற்றை தூர்வாரும் பணி துவக்கம்!</strong></p><p>அவிநாசி, ஜூலை 15- திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அணைப் புதூர் பகுதியில் நல்லாற்றை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் புதனன்று தொடங்கப்பட்டன. நீர்நிலைகளை பாதுகாத்து, மழைநீர் சேமிப்பை உயர்த்தி, சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து இப்பணியை முன்னெடுத்துள் ளன. நல்லாற்றை முழுமையாக சீரமைக்க அனைத்து ரோட்டரி சங்கங்கள், நல்லாறு பாதுகாப்பு இயக்கம், ரிதன்யா அறக்கட்டளை, டீசா சங்கம், குளம் காக்கும் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக, அணைப்புதூரில் பணிகள் தொடங்கின. துவக்க நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் பூபதி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பால முருகன் முன்னிலை வகித்தார். இதில் நல்லாறு பாது காப்பு இயக்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் அருணாச்சலம், நிர்வாகி பாலசுப்பிரமணியம், ரிதன்யா அறக்கட்டளை நிறுவனர் அண்ணாதுரை, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், சேவூர் மற்றும் கரு வலூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
