சிறப்பு தீர்மானம் நிறைவேற்றாததால் நல்லாறு பாதுகாப்பு இயக்கம் ஏமாற்றம்
26 Nov 2025, 4:29 pm
<p><strong>சிறப்பு தீர்மானம் நிறைவேற்றாததால் நல்லாறு பாதுகாப்பு இயக்கம் ஏமாற்றம்</strong></p>
<p>அவிநாசி, நவ.26 - திருமுருகன்பூண்டி நகராட்சியில் நல்லாற்றை தூய் மைப்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நல்லாறு பாதுகாப்பு இயக்கம் ஒரு மாதத் திற்கு முன்பு துவங்கப்பட்டது. இதில் நல்லாற்றை தூய் மைப்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும், நல்லாற்றில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டி மழைக்காலத்தில் பாதிப்பை சந்திக்கும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும் எனக்கூறி நாடாளுமன்ற உறுப் பினர்களை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செவ்வாயன்று திருமுருகன் பூண்டி நகர்மன்றக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறை வேற்றியிருக்க வேண்டும். குறிப்பாக, நல்லாற்றைத் தூய் மைப்படுத்துவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண் டும் என்று தமிழக அரசு பொதுப் பணித்துறைக்கு கோரிக்கை விடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும், ஆனால் தீர்மானம் நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது என்று நல்லாறு பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்துள் ளனர்.</p>
