தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

19 Jun 2026, 9:54 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தோழர் ஆர். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல்

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்ல கண்ணு 2026 பிப்ரவரி 25 அன்று தமது 101-வது வயதில் காலமானார்.

இந்நிலையில், தோழர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மா னம் கொண்டுவரப்பட்டது. பேரவை தலைவர் ஜே.சி.டி. பிர பாகர் பேசுகையில், “இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தவர். தமிழ்நாட்டு மக்களுக் காகவும், விவசாயிகள் மற்றும் ஏழை - எளிய தொழிலாளர் களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். மறைந்த அமைச்சர் கக்கனின் வாரிசு என்றும் தமிழ்நாட்டின் காந்தி என்றும் போற்றப்படும் தோழர் நல்லகண்ணு எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர்” என்று கூறினார்.

மேலும், தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் செயலா ளர் சி.கே. ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சவுத்ரி, கே. ராஜன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கும் சபாநாயகர் இரங்கல் தீர்மானங்கள் வாசித் தார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

சட்டப்பேரவை நேரலை நிறுத்தம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியதும், பேரவையின் நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக முடக்கப்பட் டிருந்த சட்டப்பேரவை நேரலை மீண்டும் தொடரும் என்று செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்திருந் தார். முதல்வர் விஜய்யின் வாக்குறுதியை நிறைவேற்றியுள் ளோம் என்றும் அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்திருந்த னர். அவ்வாறிருக்க, திடீரென நேரலை நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அதிமுக ஐடி விங் தனது சமூக வலைதள பக்கத்தில், “முழு நேரலை, முழு நேரலை என்று சொன்னது அத்தனை யும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என்று கடுமையாக விமர்சித்தது.

மோசடி பேர்வழிகளுக்குத் துணைபோனவர் சி. மகேந்திரன்!

மு. வீரபாண்டியன் அறிக்கை சென்னை: சி. மகேந்திரன், தவெக-வில் இணைந்திருப்பது குறித்து, சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி. மகேந்திரன், சமீபகாலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக் கைக்கு உள்ளாக்கப்பட்டார். தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை போலி ஆவணங்கள் கையகப்படுத்த முயன்ற மோசடிப் பேர்வழி களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், சி. மகேந்திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார். தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

சிங்கப் பெண் அதிரடிப்படை போதாது: ஜவாஹிருல்லா

சென்னை: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலை யில், அரசின் சிங்கப்பெண் அதிரடிப்படைத் திட்டம் காட்டுத் தீயை அணைக்கும் சிறு பனித்துளி போல் மட்டுமே உள்ளது என்று மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.