தீக்கதிர் விரைவு செய்திகள்
16 Aug 2026, 9:31 pm

பெண்களை இழிவுபடுத்திய நயினார் நாகேந்திரன்பெ.சண்முகம் கண்டனம்

சென்னை, ஆக.16 -பொது வெளியில் நயினார் நாகேந்திரன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

பெண்களை மதிப்பதுபாஜகவின் அகராதி யிலேயே இல்லாத விஷயம்எனக் குறிப்பிட்ட அவர்,பொது வாழ்வில் இருப்ப வர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூடஇல்லாமல் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பதாகவும், அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் கூறினார். மேலும், தமிழக அரசு அவர் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப் பேரவையில் இன்று முதல் மானியக் கோரிக்கை விவாதம்

சென்னை, ஆக.16 -தமிழ்நாடு சட்டப் பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் திங்களன்று (ஆக. 17) தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விவாதத்தின்போது பல்வேறு துறைகளின் புதிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன. துறை வாரியாக அமைச்சர்கள் தங்கள் இலாகா மீதான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சுதந்திர தின கொண்டாட்டம்

சென்னை, ஆக.16 -தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட புதிய சுற்றறிக்கையின்படி, மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்தே மாதரம் பாடலுடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.