நாகுடி - நிலையூர் சாலை அகலப்படுத்த தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை
14 May 2026, 10:03 pm

நாகுடி - நிலையூர் சாலை அகலப்படுத்த தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

அறந்தாங்கி, மே 14- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நாகுடியில் இருந்து களக்குடி, மைவயல், வேதியன்குடி, வேட்டனூர் வழியாக நிலையூர் செல்லும் சாலையில் பேருந்து போக்குவரத்து இருந்தும், சாலை மிகவும் குறுகிய சிறிய அளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஒரு பேருந்து செல்லும் நேரத்தில் மற்றொரு வாகனம் எதிரில் வந்தால் நிறுத்தி பின்னோக்கிச் சென்றுதான் ஒதுங்க வேண்டியுள்ளது.

வழி நெடுகிலும் ஏரிகள் அதிக அளவில் உள்ளன.

மொத்த தூரம் 10 கி.மீ ஆகும். மழை நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கூட ஒதுங்க முடியவில்லை. அதேபோல், விவசாய நேரங்களிலும் அதிக சிரமமாக உள்ளது.

நாகுடி முதல் நிலையூர் வரை சாலையை அகலப்படுத்தி அமைத்துக் கொடுத்தால் விவசாய மக்கள் பயன் பெறுவார்கள்.

எனவே, உடனடியாக இந்த சாலையை அகலப்படுத்திக் கொடுக்க புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் டி. ரமேஷ், முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.