தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாகேஸ்வரராவ் பூங்கா பணிகள் விரைவில் நிறைவடையும் எம்.சரஸ்வதி கேள்விக்கு ஆணையர் சமீரன் பதில்

57 minutes before
நாகேஸ்வரராவ் பூங்கா பணிகள் விரைவில் நிறைவடையும் எம்.சரஸ்வதி கேள்விக்கு ஆணையர் சமீரன் பதில்

நாகேஸ்வரராவ் பூங்கா பணிகள் விரைவில் நிறைவடையும் எம்.சரஸ்வதி கேள்விக்கு ஆணையர் சமீரன் பதில்

சென்னை, செப். 26 –நாகேஸ்வரராவ் பூங்கா பணி கள் விரைவில் நிறைவடையும் என்று ஆணையர சமீரன் தெரி வித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் வெள்ளியன்று (செப். 25) ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடை பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது அந்தத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது” என்பதை சிபிஎம் உறுப்பினர் எம். சரஸ்வதி பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து கேள்வி எழுப்பிய அவர், “நாகேஸ்வர ராவ் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்கு ஓராண்டிற்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டது. இதில் 3 கோடி ரூபாய் காசாகிராண்ட் நிறுவனம் வழங்கும். எஞ்சிய தொகையை மாநகராட்சி வழங்கும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

ஆனால், கடந்த மே மாதம் திட்ட மதிப்பீடு 8 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மாடல் திட்டம் என்று கூறி அங்கிருந்த மரங்களை

யெல்லாம் வெட்டினர். இதனால் வெயில், மழைக்காலங்களில் மக்கள் நிற்க முடியாத நிலை உள்ளது. எனவே, பூங்கா வளாகத்தில் மேற்கூரை உள்ளிட்ட பணிகள் விரைந்து எப்போது முடிக்கப்படும்? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஆணையர் ஜி.எஸ்.சமீரன், பூங்கா பணிகள் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என்றார். துணைமேயர் மகேஷ்குமார் பதிலளிக்கையில், பூங்காவை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.