தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாகர்கோவில் அருகே தொழிலதிபர் வீட்டில் 118 பவுன் தங்கம், வைர நகைகள் கொள்ளை

25 Sept 2026, 10:01 pm
நாகர்கோவில் அருகே தொழிலதிபர் வீட்டில் 118 பவுன் தங்கம், வைர நகைகள் கொள்ளை

நாகர்கோவில் அருகே தொழிலதிபர் வீட்டில் 118 பவுன் தங்கம், வைர நகைகள் கொள்ளை

நாகர்கோவில், செப். 25-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஐபி கார்டனை சேர்ந்தவர் வினோத்குமார்(30). தொழிலதிபரான இவரது மனைவி மதுமிதா(27). யூ டியூப்பரான மதுமிதா அதிக பார்வையாளர்களை கவர்வதற்காக வித்தியாசமான வகையில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வந்தார்.

இவர் தனது வீட்டில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் பணத்தை வைத்து கொண்டும் பணத்தை வாரிவீசி பணமழை பொழிவது போன்றும், தனது மகளின் மீது பணத்தால் அபிஷேகம் செய்வது போலவும், தங்க நகைகளையும், தங்க கட்டிகளையும் அதிக அளவில் வைத்து காட்டி வீடியோ எடுத்து அதை ரீல்ஸாக பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் மதுமிதா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் செப்டம்பர் 24 வியாழனன்று திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். நள்ளிரவு வீடு திரும்பியபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 118 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகள் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த வினோத்குமார் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நாகர்கோவில் டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையில் யூ டியூபர் மதுமிதா வீட்டில் நகை கொள்ளை நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீட்டை சுற்றியுள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

கொள்ளையர்களை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுமிதாவின் வீட்டில் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.