தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாகர்கோவில்: ரயில் பெட்டியில் பெண் பாலியல் கொலை வழக்கில் இளைஞர் கைது

yesterday
நாகர்கோவில்: ரயில் பெட்டியில் பெண் பாலியல் கொலை வழக்கில் இளைஞர் கைது

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐயப்பன் (31) என்ற இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் - கோட்டயம் இடையே இயக்கப்படும் ரயிலின் (வண்டி எண்: 16366) கடைசிப் பெட்டியான மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, பராமரிப்புப் பணிகளுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி காலை 8 மணியளவில், அந்தப் பெட்டியின் இருக்கைக்கு அடியில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், உடற்கூறாய்வுக்காக சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையில், பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நவம்பர் 14-ஆம் தேதி காலை 8 மணியளவில், வெள்ளை சட்டை மற்றும் வேட்டி அணிந்த நபர் ஒருவர் அந்தப் பெட்டியிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. போலீசார் விசாரணையில், அந்த நபர் குமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (31) என்பதும், அவர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழியில் ஒரு திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று ஐயப்பன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐயப்பனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நவம்பர் 14-ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதும், குற்றம் நடந்த சுமார் ஏழரை மணி நேரத்திற்குப் பிறகே அந்த இளைஞர் ரயில் பெட்டியிலிருந்து வெளியேறியதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் ரயில் நிலையங்களில் நிலவும் பாதுகாப்பு குறித்தும்,

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் இத்தகைய கொடூரச் சம்பவம் எப்படி நடந்தது, 4 நாட்களாக சடலம் யாருடைய கண்ணிலும் படாமல் இருந்தது எப்படி என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.