தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

16 Jun 2026, 9:17 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

நாகர்கோவில் ஒழுகினசேரியில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில்,ஜூன் 16- ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள் நடப்பதால் ஜூன் 17ஆம் தேதி முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் (வடசேரி) இருந்து வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் ஒழுகினசேரி பழைய பாலம் வழியாகவே வழக்கம்போல் செல்லலாம் (ஒருவழிப் பாதை ). திருநெல்வேலி மார்க்கத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அப்டா மார்க்கெட் முன்பு இடதுபுறம் திரும்பி, புத்தேரி வழியாக அசம்பு ரோடு வந்து வடசேரியை அடைய வேண்டும். இந்தத் தற்காலிக ஏற்பாடு அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம்

நாகர்கோவில், ஜூன் 16- ஜூன் 21 ஆம் தேதி நடை பெறவுள்ள நீட் இளநிலை மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு தொடர்பாகப் பரப்பப்படும் தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தடுக்க தேசிய தேர்வு முகமை ஒரு புதிய பிரத்யேகப் புகார் தளத் தைத் தொடங்கியுள்ளது. ஆதாயங்களைப் பெற்றுக் கொண்டு வினாத்தாள்க ளைக் கசியவிடுவதாகவோ அல்லது தேர்வில் குறிப் பிட்ட மதிப்பெண்களைப் பெற்றுத் தருவதாகவோ உறுதியளிக்கும் நபர்கள் மற்றும் குழுக்கள், தேசியத் தேர்வு முகமை அதிகாரிகள் அல்லது அரசுப் பிரதிநி திகள் போல ஆள்மாறாட்டம் செய்து தேர்வர்களை ஏமாற்றுபவர்களின் செயல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட மோசடி குறித்த ஆதாரங்கள் இருந்தால் அவற்றையும் இணைத்துப் புகாரைச் சமர்ப்பிக்கலாம். புகார்களை அளிக்க வேண் டிய தளங்கள். பிரத்யேக இணையதளம்: https://innovateindiã.mygov.in/neet-ug-2026/ என்டிஏ அதிகாரப்பூர்வ தளங்கள்: www. nta.ac.in மற்றும் https://neet. nta.nic.in/ சமூக ஊடகங்களில் வரும் ஆதாரமற்ற தகவல்களைத் தேர்வர்கள் பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அர சின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு டன் இணைந்து என்டிஏ தொடர்ந்து கண் காணிப்பில் ஈடுபடும். தவறான தகவல்கள் குறித்து பிஐபி வாட்ஸ்அப்-இல் +91 8799711259- அல்லது factcheck@pib.gov.in-இல் புகார் அளிக்கலாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

நாகர்கோவில், ஜூன் 16 - குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ஆன்சிலி (65). இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் ஊருக்கு செல்ல, மருத்துவக்கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தில் ஏறி, டெரிக் சந்திப்பில் வந்திறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை காணவில்லை. இது குறித்த நேச மணிநகர் காவல் நிலையத்தில், ஆன்சிலி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்சிலி, பயணம் செய்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கைவரிசை காட்டியுள்ளனர். பேருந்து நிறுத்தங்களில் உள்ள கேமி ராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

போதைப்பொருளுக்கு எதிராக ஜூன் 26 நாகர்கோவிலில் மாபெரும் விழிப்புணர்வு ஓட்டம்

நாகர்கோவில்,ஜூன் 16- தமிழ்நாடு அரசின் ”போதை இல்லாத தமிழ்நாடு” என்ற உயரிய இலக்கினை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக ”ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs” Anti-Drug 2026 என்ற மாபெரும் விழிப்புணர்வு ஓட்டம் 26.06.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்திலிருந்து துவங்கப்படவுள்ளது. இவ்விழிப்புணர்வு ஓட்டமானது சுமார் 6.5 கி.மீ தூர ஓட்டத்தில் 14 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், NCC, NSS, Nyks விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் (ம) பொதுமக்கள் என ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி.சர்ட் வழங்கப்படும். இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ”போதை இல்லாத தமிழ்நாடு” உருவாக்கிட ஒத்துழைப்பு நல்குமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ (அ) 04652 262060 /7401703507 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தல்

நாகர்கோவில், ஜூன். 16- கன்னியாகுமரி மாவட்டத்தில், பிரதமரின் விவசாயிகளுக்கான கெளரவ நிதி திட்டத்தின் மூலம் ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், 3 தவணைகளில் ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் 22 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தவணைத் தொகை ஆதார் அடிப்படையில் விடுவிக்கப்படுவதால், புதுப்பிக்காத கே.ஒய்.சி., வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகளுக்கு, தவணைத் தொகை விடுவிக்கப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தவணைத் தொகை பெறாத தகுதியுள்ள விவசாயிகள், வேளாண் துறையை அல்லது பி.எம்.கிசான் இணையதளத்தில் பயனாளர் விபரத்தைப் பார்த்து சரிசெய்தால் மட்டுமே 23வது தவணைத் தொகையைப் பெறமுடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இ-கே.ஒய்.சி., செய்யாமல் 674 விவசாயிகளும், தங்களது ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படாமல் 668 விவசாயிகளும் உள்ளனர். எனவே, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வங்கி கிளையை அணுகி ஆதார் எண்ணை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் பதிவு செய்யலாம். பொது சேவை மையங்களை அணுகி பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யலாம். வட்டார வேளாண் அலுவலர்களை அணுகி ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பி.எம்.கிசான் ஆப் மூலம் இ.கே.ஒய்.சி., பதிவு செய்து கொள்ளலாம். தகுதியுள்ள விவசாயிகள், இத்திட்டத்தில் பயன்பெற, வேளாண்மை விரிவாக்க மையங்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ, வங்கி கிளைகளையோ அணுகி தங்கள் கே.ஒய்.சி., மற்றும் ஆதார் இணைப்பு நிலுவையை நிவர்த்தி செய்திட விவசாய பெருமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.