திருச்சி விரைவு செய்திகள்
18 Jun 2026, 9:31 pm

ஆட்சியர் வீட்டு சமையல்காரர் மீது தாக்குதல்

நாகர்கோவில்,ஜூன் 18- குமரி மாவட்ட ஆட்சியர் பங்களாவில் சமையல்கார ராக பணிபுரிபவர் பாபுராஜ்.பாபுராஜ் பணிக்குச் செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வினோத் குமார் என்பவர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். தடுக்க வந்த பாபுராஜின் தந்தை ரவியையும் தாக்கியுள்ளார். காயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக ஸ்ரீ வினோத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து,விசாரிக்கின்றனர்.

முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு

நாகர்கோவில்,ஜூன் 18- குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் நாகர்கோ வில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் கீழ்மட்டத்திற்குச் சென்றது. தற்போது 25 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் 11.30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 30 வரை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை

நாகர்கோவில்,ஜூன் 18- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 - ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Ad mission) 30.06.2026 வரை நடைபெற உள்ளது. தொழிற் பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும். பெண்க ளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஐ.டி.ஐ-யில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 11 ஆம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு, Diploma / Degree தேர்ச்சி / தோல்வி மற்றும் இடைநின்றோர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் தொழில் 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்ப புதிய தொழிற்பிரிவுகள் 1. Advanced CNC Machining Technician 2. Industrial Robotics & Digital Manufacturing மற்றும் 3. Mechanic Electronic Vehicle ஆகிய மூன்று தொழிற்பிரிவுகள் துவங் கப்பட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. மேலும் காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதவருக்காக Fitter (Deaf & Dumb) என்னும் சிறப்பு தொழிற்பிரிவு உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாண வர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களு க்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750-, பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் மற்றும் 1 செட் கால ணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசி னர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவி லில் முதல்வரை நேரில் அணுகவும். 04652- 261463, 9499055806, 9499044805 அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவ னங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ஐடிஐ.யில் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், கேட்டுக் கொண்டுள்ளார்.

விதிமீறல் -அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்திய வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடி,ஜூன் 18- தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சுனை முருகன் தலைமையில், உதவி ஆய்வாளர் பாலன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தூத்துக்குடி நகரின் முக்கியப் பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களை இயக்கிய பள்ளி மாணவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக வந்த வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். குறிப்பாக, பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பெரும் இடையூறாக, விதிகளுக்குப் புறம்பாக அதிக இரைச்சல் மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களைப் பொருத்தியிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்கள் அகற்றப்பட்டன. மேலும், விதிகளை மீறிய பள்ளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றும் இதர வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து ஆய்வாளர் மற்றும் போலீசார் கடுமையான அறிவுரைகளை வழங்கி எச்சரித்து அனுப்பினர். விபத்துகளைக் குறைக்கவும், நகரின் அமைதியைப் பேணவும் இத்தகைய அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.