தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாகர்கோவில் கிளைச் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி மர்ம மரணம்!

13 Jul 2026, 9:41 pm
நாகர்கோவில் கிளைச் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி மர்ம மரணம்!

நாகர்கோவில் கிளைச் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி மர்ம மரணம்!

போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

நாகர்கோவில் ஜூலை 13 - நாகர்கோவில் கிளைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி யான மாற்றுத் திறனாளி சிறைக் குள் உயிரிழந்தார். அவரது உட லில் காயங்கள் இருந்ததாக வும், அடித்து கொலை செய்யப் பட்டதாகவும் அவரது உறவினர் கள் புகார் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே ஈத்தங்காடு பகுதியைச் சார்ந்தவர் சபரி வர்மன் (33). மாற்றுத் திறனாளியான இவருடன் ஆனந்தவள்ளி என்ற மனைவியும், 4 வயது மகன் வினு வர்மனும், உடல் நலம் குன்றிய முதிய தாய்-தந்தையரும் வசித்து வந்தனர். சபரி வர்மன் அவரது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி, இவரது கடைக்கு வந்த தென் தாமரைகுளம் காவல் துறையினர், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொ ருட்கள் இருந்ததாக கூறி. கைது செய்து, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர். ஜூலை 13 (திங்களன்று) காலை கிளைச் சிறையில் சபரி வர்மன் இறந்து கிடந்துள்ளார். உடனடி யாக சிறை அதிகாரிகளுக்கும், நேசமணி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறை யினர் மூலம் தகவலறிந்த சபரி வர்மன் குடும்பத்தினரும் ஊர்மக்க ளும் மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடு பட்டனர். ஜூலை 9 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சபரி வர்மன் நல்ல நிலையில் இருந்ததாகவும், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்திருப்பதாகவும் மனைவி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். திருநெல்வே லியில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு வந்து உடற்கூராய்வு செய்ய வேண்டும் என அவர்கள் வலி யுறுத்தினர். பிணவறையில் சபரிவர்மன் உடலை பார்க்க அனுமதிக்காதது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின் பிணவறையை திறந்து சடலத்தை பார்க்க ஏற்பாடு செய்வ தாக கூறியதுடன், புகாரை எழுதி தருமாறு கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து மறியலை விலக்கி கொண்டனர். பின்னர் அளித்த புகார் மனு வில், தனது கணவரை கைது செய்ய வந்த காவல் துறையினர் ரூ.25 ஆயிரம் கேட்டதாக குறிப்பிட் டுள்ளார். பணம் கொடுக்காத நிலையில் மீண்டும் வந்து கைது செய்ததாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆத ரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். ரெஜீஷ்குமார், ஆர்.ரவி. மாவட்டக் குழு உறுப்பினர் மோகன், தவெக மாவட்டச் செயலாளர் மாத வன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர். இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கண்ணன் கூறுகையில், “மாற்றுத் திறனாளியான சபரிவர்ம னின் மரணம் குறித்து நீதி விசார ணை நடத்த வேண்டும். சிறப்பு மருத்துவக் குழு மூலம் உடற்கூராய்வு செய்ய வேண்டும். ஆதரவற்ற நிலையில் உள்ள சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சம் பந்தப்பட்ட காவல்துறையினரை பதவி நீக்கம் செய்து அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.