தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செம்மாங்குளத்தில் பறவைகளுக்கான சிறிய தீவு அமைக்கும் பணிமாவட்ட ஆட்சியர் ஆய்வு

27 minutes before
செம்மாங்குளத்தில் பறவைகளுக்கான சிறிய தீவு அமைக்கும் பணிமாவட்ட ஆட்சியர் ஆய்வு

செம்மாங்குளத்தில் பறவைகளுக்கான சிறிய தீவு அமைக்கும் பணிமாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகர்கோவில், நவ.27-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், செம்மாங்குளம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளரச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா முன்னிலையில் நவம்பர் 27 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் ஆட்சியர் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் மாநகராட்சி கல்வி நிதி2025-2026 திட்டத்தின் கீழ் முதல்வர் படைப்பகம் ரூ.3.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சியின் சார்பில் 6 வது மாநில நிதி ஆணைய நிதியின்

கீழ் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மாங்குளத்தில் ரூ.6.59 கோடி மதிப்பில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு நீர் மட்டம் குறையாமல் இருக்கிற நீர்மட்டத்தை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக செம்மாங்குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம், பூங்கா, குளத்தின் ஒருபுறம் மின்விளக்குகள்அமைத்து, மரக்கன்றுகள் நட்டு, பறவைகளுக்கான ஒரு சின்ன தீவு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் அனைத்தையும் நான்கு ஐந்து மாதங்களுக்குள் முடித்திட நாகர்கோவில் மாநகராட்சிஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடசேரி நவீன பேருந்து நிலையப்பணி

தொடர்ந்து மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.8.95 கோடி மதிப்பில் வடசேரி பேருந்து நிலையம் பகுதியில் 100 கடைகள் கொண்ட மார்க்கெட் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நடைபெற்று வரும் வணிக வளாகக் கட்டுமானப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் வரும் நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடித்து, திறந்திட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரூ.69.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் வடசேரி நவீன பேருந்து நிலைய கட்டுமான பணியினை ஆய்வு மேற்கொண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் பழைய சந்தையினை இடிப்பு

அப்புறப்படுத்தி இடம் ஒப்படைப்பு செய்திடவும், பணியினை உரிய காலத்திற்குள் முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் வடசேரி பேருந்து நிலையவளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையத்தினை ஆய்வு செய்து உரங்கள்விற்பனை செய்வது குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் நாகர்கோவில் கே.பி.ரோடு அப்சர்வேட்டர் தெருவில்குப்பைகளை தரம்பிரித்து வாங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.இந்த ஆய்வுகளில் பொறியாளர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.