தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.4.17 கோடியில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம்

22 Dec 2025, 2:53 pm
ரூ.4.17 கோடியில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம்
<p><strong>ரூ.4.17 கோடியில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம்</strong></p> <p>நாகர்கோவில். டிச. 22- தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.4.17 கோடி மதிப்பில் &nbsp;புதிதாக கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவ லக கட்டடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த தைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் முதல்வருக்கு நன்றி கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கன்னி யாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் இராமபுரம் ஊராட்சிக் குட்பட்ட குலசேகரம்புதூர் பகுதி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகர்கோவில் வட்டார போக்கு வரத்து அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரிமாவட்ட ஆட்சித் தலைவர் ஆட்சியர் நன்றி தெரி வித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய 2 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் மற்றும் களியக்காவிளை போக்குவரத்து சோதனை சாவடியும் தற்போது இயங்கி வருகிறது. மார்த்தாண் டத்தில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கடந்த 20.11.2021 முதல் சொந்த கட்டிடத்தில் செயல் பட்டு வருகிறது.மார்த்தாண்டம் வட்டாரப்போக்குவரத்து அலு வலக ஓட்டுநர் தேர்வு தளமானது, கணினிமயமாக்கப்பட்ட தானி யங்கி ஓட்டுநர் தேர்வு தளமாக மேம் படுத்தப்பட்டு, &nbsp;அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மேலும் போக்குவரத்துதுறை சார்பில் தானியங்கி தகுதிச் சான்று நிலையம் நாகர்கோவில் ராணித் தோட்டம் அருகில் விரைவில் பயன் பாட்டிற்கு வர உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகமானது கடந்த 69 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த &nbsp;கட்டிடம் &nbsp;இல்லாததாலும், பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதாலும் எல்லா சேவைக ளும் சேர்ந்து ஒரே இடத்தில் கிடைக்க பெறும் வகையில் புதிய கட்டிடம் வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படை யில் முதலமைச்சர், போக்கு வரத்துத்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் போக்குவரத்து துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேக ரம் புதூரில் ரூ.4.17 கோடி மதிப்பில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய நாகர்கோவில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. &nbsp;அதனடிப்படையில் குலசேக ரம் புதூரில் புதிதாக கட்டப் பட்டுள்ள நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவகத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள் ளார். இவ் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பாக புதிய உரிமம் வழங்குதல், பொதுப் பணிவில்லை மேற்குறிப்பு செய் தல், பன்னாட்டு உரிமம் வழங்கு தல், உரிமம் புதுப்பித்து வழங்கு தல், நகல், உரிமம் வழங்குதல் போன்ற சேவைகளும், பதிவுச் சான்று தொடர்பாக புதிய வாகனம் பதிவு செய்தல், முகவரி மாற்றம் செய்தல், வாகனம் பெயர் மாற்றம் செய்தல், தவணைகொள்முதல் மேற்கொள்ளுதல் மற்றும் ரத்து செய்தல் போன்ற சேவைகளும், அனுமதி சீட்டு தொடர்பாக, புதிய அனுமதிச்சீட்டு வழங்குதல், தேசிய அனுமதி சீட்டு வழங்குதல், அனுமதி சீட்டு சரண் செய்தல் மற்றும் அனுமதிச்சீட்டு புதுப் பித்தல் போன்ற சேவைகளும், மேலும் இதர சேவைகளான வாகன தகுதிச்சான்று புதுப்பித்தல், வெளி மாநில வாகனம் மறு பதிவு மேற்கொள்ளுதல், விபத்து &nbsp;வாகனங்களை ஆய்வு செய்தல் தொடர்பான பணிகள் மேற்கொள் ளப்படும். &nbsp;இதன் மூலம் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் காலதாமத மின்றி ஒரே இடத்தில் ஓட்டுநர் தேர்வு மேற்கொண்டு பயன்பெற முடியும். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காத்தி ருப்போர் அறை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளது. மேலும் அலுவலக கோப்புகள் பராமரித்து பாதுகாத்து வைப்பதற்கு உரிய இட வசதி ஏற்படுத்தி தரப் பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்ந்த சேவைகளை எளிதாகவும் உடனடியாகவும் பெற்றுக் கொள்ள இதன் மூலம் &nbsp;வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வசதி களை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் சார்பில் நன்றியினை காணிக்கையாக்குகிறேன். என ஆட்சியர் பேசினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாடு உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ந.தளவாய் சுந்த ரம் (கன்னியாகுமரி), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ், துணை போக்குவரத்து ஆணையர் (திருநெல்வேலி மண்ட லம்) சக்திவேல், நாகர்கோவில் (பொ) மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவ லர் சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.