வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாகர்கோவிலில் இடதுசாரி கட்சிகள்- விசிக ஆர்ப்பாட்டம்
7 May 2026, 9:35 pm

வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாகர்கோவிலில் இடதுசாரி கட்சிகள்- விசிக ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே 7- வணிக எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய, ரயில்வேயில் 30 ஆயிரம் பணியிடங்களை ஒழித்துக் கட்டிய ஒன்றிய பாஜக அரசைக் செயல்பாட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச்சிறுத்தை கள் கட்சியின் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி எம்எல்ஏ., தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் டி.சுபாஷ் சந்திர போஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், விசிக மண்டலச் செயலாளர் பா.பகலவன் ஆகியோர் உரையாற்றினர்.

மோடி அரசின் அப்பட்டமான கொள்ளை சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி பேசுகையில், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மக்க ளுக்கும் சிறு வணிகர்களுக்கும் கடுமையான சுமையாகும்.

ஏற்கெனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் வருமானப் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றனர்.

கடந்த நான்காண்டுகளாக சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க முன்வரவில்லை.

இந்நிலை யில் தற்போது வணிக சமையல் எரி வாயு விலையை உயர்த்தியிருப்பது அப்பட்டமான கொள்ளையாகும்.

2026 ஏப்ரல் 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள ரயில்வே துறை யின் சுற்றறிக்கையின் படி ரயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்களில் ஆண்டுக்கு 2 சதவிகிதத்தை குறைக்க வேண்டுமென்று வலி யுறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு 28 ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு 30 ஆயிரம் பணியிடங்களை குறைப்பதற்கு இந்த சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்கிற முழக்கத்தோடு மக்க ளை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், ரயில்வேயில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சம் பணியிடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பா மல் வைத்துள்ளதோடு அதை குறைப்பதற்கு திட்டமிடுகிறது. இது கண்டிக்கத்தக்கது என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அந்தோணி, எம் .அண்ணாதுரை, என். எஸ். கண்ணன், என். ரெஜீஸ்குமார், ஆர்.ரவி, எஸ். ஆர். சேகர், ஏ.நீலாம் பரன், நாகர்கோவில் மாநகரச் செய லாளர் எஸ்.அருணாசலம், சிபிஐ நிர்வாகி ராஜு , விசிக மாவட்டச் செயலாளர் மேசியா உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.