தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில்களுக்கு ஜூன் 1-30 நாகர்கோவிலில் சிறப்பு கடன் முகாம்

27 May 2026, 10:44 pm
குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில்களுக்கு ஜூன் 1-30 நாகர்கோவிலில் சிறப்பு கடன் முகாம்
<p><strong>குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில்களுக்கு ஜூன் 1-30 நாகர்கோவிலில் சிறப்பு கடன் முகாம்</strong></p><p>மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு நாகர்கோவில்,மே 27- நாகர்கோவில் கிளை அலுவலகத்தில் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு நிதிக் கழகம் ஆகும். தமிழ்நாடு அரசு நிறுவனமான இந்நிறுவனம் 1949 - ஆம் ஆண்டு துவங்கப் பெற்று மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழ்நாட்டில் 77 வருடங்களை கடந்து தொழில் துறைக்கு சேவை புரிந்து வருகிறது. இக்கழகம் குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற் சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங் களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. நாகர்கோவில் கிளை அலுவலகத்தில் (முகவரி:-143 கேப் ரோடு, வேப்பமூடு ஜங்சன் அருகில், நாகர்கோவில்) குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை (அலுவலக வேலை நாட்களில்) நடைபெற உள்ளது. இக்கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு நிதி உதவி திட்டங்களின் சிறப்பம்சங்கள், ஒன்றிய, மாநில அரசு களின் மானியங்கள், புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. III P &amp; C Department , தலைமைச் செய லகம், சென்னை அவர்களின் கடித எண் 12186713 / MIF.1/2025-1 நாள் 17.11.2025 இன் படி 2026-27 ஆம் நிதியாண்டில் சமர்ப்பிக்கப் படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்ட ணத்திலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதி பெறும் தொழில் களுக்கு (MSME) தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ. 150 இலட்சங்கள் வரையும், உற்பத்திச் சார்ந்த குறுந்தொழில்களுக்கு தமிழக அரசின் மூலதன மானியமாக 25 விழுக்காடும் கூடு தல் மானியமாக 10 விழுக்காடும் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு கூடுத லாக 5 விழுக்காடும் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்பினை தொழில் முனை வோர் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவை களை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித் துள்ளார். தொடர்புக்கு: 04652-225774, 9445023468.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.