தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறைந்தபட்சம் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திடுக! நாகர்கோவில் -களியக்காவிளை நெடுஞ்சாலை புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல

4 Nov 2026, 8:47 pm
குறைந்தபட்சம் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திடுக! நாகர்கோவில் -களியக்காவிளை  நெடுஞ்சாலை  புனரமைப்புக்கு  நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல

குறைந்தபட்சம் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திடுக! நாகர்கோவில் -களியக்காவிளை நெடுஞ்சாலை புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல

ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பேட்டிநாகர்கோவில், நவ. 4-கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ள நாகர்கோவில்- களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை புனரமைப்பு பணிக்கு தற்போது ஒதுக்கப் பட்டுள்ள தொகை போதுமானதல்ல. குறைந்தபட்சம் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சிபிஎம் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்வசுவாமி வலியுறுத்தினார்.

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நவம்பர் 4 புதனன்று சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தின்போது நாகர்கோவில்- களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் மட்டுமல்ல மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு சீர்குலைந்திருப்பதை தெரிவித்து, உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். சாலை மேலும் சேதமடைந்துள்ள நிலையில் அண்மையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தில், எனது தலைமையில் தக்கலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த சாலையில் உள்ள குண்டும் குழி

களை நிரப்புவதற்கு ரூ. 25 லட்சம்ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை இன்றைய தினம் துவக்குவதாக தெரிவித்துள்ளார்.இது கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆகிவிடும். இந்தச் சாலையை முழுமையாக மறுசீரமைப்பு செய்திட கடந்தாண்டு ரூ.16 கோடிக்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக அறி

விக்கப்பட்டது. பணி நடைபெற வில்லை. இந்த ஆண்டும் அதுபோல்

அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை முழுமையாக மறு சீரமைக்க குறைந்தது ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் என். எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். அகமது உசேன்,எஸ். அந்தோணி, கே.தங்கமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.