சிறையில் மாற்றுத்திறனாளி கொலைக்கு கண்டனம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
15 Jul 2026, 10:40 pm
<p><strong>சிறையில் மாற்றுத்திறனாளி கொலைக்கு கண்டனம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 15- நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (33) அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மூன்றாவது நாளாக சபரிவர்மனின் சடலம் வைக்கப்பட்டுள்ள ஆசாரி பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துமனை முன்பு, ஜுலை 15 புதனன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.வில்சன் தலை மை வகித்தார். மாநில துணை தலைவர சி.முரு கேசன், மாவட்ட தலை வர விமல்ராஜ், இணை செய லாளர் எம்.அருள், துணை தலைவர் ஜெயானந்த், பேராசிரியர் மனோர ஜஸ்டஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.</p>
